1.*தலை:* கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார் ஸ்தோத்திரம்(சங்23:5) 2. *முகம்:* கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம்.(எண்6:25) 3. *நெற்றி:* கர்த்தர் என் நெற்றியில் அவருடைய நாமத்தை தரிப்பித்திருக்கிறார் ஸ்தோத்திரம்.(உபா28:10) 4. *கண்:* கர்த்தர் என் கண்களைக் கண்ணீருக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்(சங்116:8) 5. *செவி:* கர்த்தர் நான் கேட்கும்படி என் செவிகளைக் கவனிக்கச் செய்கிறார். ஸ்தோத்திரம்.(ஏசா50:4) 6.*வாய்:* கர்த்தர் என் வாயை நன்மையால் திருப்தியாக்குகிறார் ஸ்தோத்திரம் (சங் 103:5) 7 *உதடுகள்:* கர்த்தர் என் உதடுகளைப் பரிசுத்தப்படுத்துகிறார். ஸ்தோத்திரம்(ஏசா6:7) 8. *நாவு:* கர்த்தர் எனக்கு கல்விமானின் நாவைத் தருகிறார்.ஸ்தோத்திரம். (ஏசா50:4) 9.*கழுத்து*: கர்த்தர் கழுத்திலிருந்து என் நுகத்தை நீக்குகிறார். ஸ்தோத்திரம்(ஏசா10:27) 10. *தோள்:* கர்த்தர் என் தோள்களை சுமைக்கு விலக்குகிறார் ஸ்தோத்திரம்(ஏசா10:27) 11. *கை:* கர்த்தர் என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கிறார் ஸ்தோத்திரம்.(சங்128:2) 12. *விரல்கள்:* கர்த்தர் என் விரல்களை யுத்த...